இவ்வாண்டின் முதல் 3 காலாண்டுகளில், சீனாவிற்கு வருகை தந்துள்ள சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 9கோடியே 50லட்சமாகப் பதிவாகியுள்ளது.
இது, கடந்த ஆண்டை விட சுமார் 80 விழுக்காடு அதிகம் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவ் நிங் அம்மையார் 13ஆம் நாள் செய்தியாளர் சந்திப்பில் சுட்டிக்காட்டினார்.
சீனச் சுற்றுலா தொடர்பான ஒரு கேள்விக்கு பதில் அளிக்கையில்,
சீனச் சுற்றுலாவின் விரைவான வளர்ச்சி, சீனா தனது உயர் நிலையிலான திறப்புக் கொள்கையை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான நல்ல எடுத்துக்காட்டாக இருக்கிறது.
சீனாவில் வெளிநாட்டு திறப்பு நிலை மேலும் விரிவாக்கத்துடனும், விசா விலக்குக் கொள்கையில் சேர்க்கப்படும் நாடுகளின் எண்ணிக்கை அதிகரிப்புடனும், சீன சுற்றுலா மேலும் பிரபலகமாக இருக்கும் என்று மாவ் நிங் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலதிக வெளிநாட்டு நண்பர்கள் சீனாவிற்கு வந்து, சீனாவை சுற்றிப் பார்த்து, சீனாவை உணர்ந்து, சீனாவை புரிந்து கொள்வதை வரவேற்கிறோம் என்றும் அவர் கூறினார்.