சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும், அரசு தலைவருமான ஷிச்சின்பிங் ஜுலை 10ஆம் நாள் பிற்பகல் பெய்ஜிங் மக்கள் மாமண்டபத்தில், சீனாவில் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள வட கொரியத் தொழிலாளர் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினரும், தேசிய கவுன்சிலின் துணைத் தலைவரும், தலைமையமைச்சருமான பாக் தே சாங்குடன் சந்திப்பு நடத்தினார்.
ஷிச்சின்பிங் கூறுகையில், தலைமுறைகளாக தொடரும் நட்பு, பகிரப்பட்ட எதிர்காலம், பரஸ்பர உதவி ஆகியவை சீன-வட கொரிய உறவின் தெளிவான தனிச்சிறப்பாகும் என்றும், சீன-வடகொரிய நட்பு, ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர உதவி ஒப்பந்தம், இருநாட்டு மக்களுக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்துவதற்கு முக்கியமான அரசியல் மற்றும் சட்டப்பூர்வ அடிப்படையை உருவாக்கியுள்ளது என்றும் தெரிவித்தார். மேலும், சீனா மற்றும் வட கொரியா உத்திப்பூர்வ சுய நம்பிக்கையை வலுப்படுத்தவும், நடைமுறை ஒத்துழைப்பை சீராக முன்னெடுக்கவும், உத்திப்பூர்வ ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவும், தத்தமது இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி நலன்களை உறுதியுடன் பாதுகாக்கவும், இருநாடுகளும் தத்தமது தேசிய நிலைமைகளுக்கு ஏற்ற சோஷலிச பாதையில் செல்வதற்கான சாதகமான வெளிப்புறச் சூழலை உருவாக்கவும் வேண்டும் என்றும் தெரிவித்தார்
பாக் தே சாங் கூறுகையில், வட கொரிய-சீன உறவை மிக வலிமையான உத்திநோக்கு உறவாக வளர்க்க வேண்டும் என்று பொதுச் செயலாளர் கிம் ஜாங் உன் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்தார். இரு கட்சிகள் மற்றும் நாடுகளின் மிக உயர்மட்டத் தலைவர்களால் எட்டப்பட்ட முக்கிய ஒருமித்த கருத்துக்களை வட கொரியா உறுதியாக செயல்படுத்தி, வட கொரிய-சீன ஒற்றுமை மற்றும் நட்புறவையும், சோஷலிச லட்சியத்தையும் புதிய உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல வட கொரியா பாடுபடும் என்றும் தெரிவித்தார்.
