பிரதமர் நரேந்திர மோடி தனது மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான மான் கி பாத்தின் 115வது எபிசோடில், இன்று (அக்டோபர் 27) உரையாற்றினார்.
சமீப காலமாக இந்தியாவில் அதிகரித்து வரும் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி வழக்குகள், குறிப்பாக டிராய், காவல்துறை, சுங்கத்துறை அல்லது ஆர்பிஐ அதிகாரிகளாக ஆள்மாறாட்டம் செய்து பொதுமக்களை ஏமாற்றும் கும்பல் குறித்து எச்சரித்தார்.
இதற்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் தொடர் நடவடிக்கை எடுத்து வந்தாலும், பலர் தொடர்ந்து இந்த மோசடி கும்பலுக்கு இலக்காகி வரும் நிலையில், இதுபோன்ற அழைப்புகளை எதிர்கொள்ளும் போது முதலில் பதற்றப்பபடக் கூடாது என மக்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.
டிஜிட்டல் பாதுகாப்பை உறுதிப்படுத்த “நில், சிந்தி, செயல்படு” அணுகுமுறையை அவர் பரிந்துரைத்தார்.