சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஜூலை 10ஆம் நாள் பிற்பகல் பெய்ஜிங்கிலுள்ள மக்கள் மாமண்டபத்தில் நமீபிய நாட்டின் அரசுத் தலைவர் நெட்டும்போ நந்தி நடைட்டுவாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இருதரப்புறவை புதிய யுகத்திற்கான சீனா-நமீபியா பொது எதிர்கால சமூகமாக உயர்த்துவதாக அவர்கள் கூட்டாக அறிவித்தனர்.
ஷிச்சின்பிங் கூறுகையில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி நாட்டின் பல்வேறு தேசிய இன மக்களை ஒன்றிணைத்து, சீனாவின் நவீனமயமாக்கத்துடன் வலுவான நாட்டின் கட்டுமானத்தையும் தேசத்தின் மறுமலர்ச்சியையும் பன்முகங்களிலும் விரைவுபடுத்தி வருகிறது. நமீபியா 2030 தொலைநோக்கு இலக்கை நோக்கி முன்னேறி வருகிறது. தற்போது இருநாட்டு நட்பு ஒத்துழைப்பை ஆழமாக்குவதற்கு உகந்த தருணமாகும். இதற்கான சிறந்த எதிர்காலம் எதிர்பார்க்கத்தக்கது என்று குறிப்பிட்டார்.
