இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) அனுப்பிய ஆதித்யா எல்1 விண்கலம், சூரியனைப் பற்றிய ஆய்வில் ஒரு மிக முக்கியமான மைல்கல்லை எட்டியுள்ளது.
சூரியனில் இருந்து உருவான ஒரு மாபெரும் சூரியப் புயல், பூமியின் பாதுகாப்புக் கவசமான காந்தப்புலத்தை எவ்வாறு பாதித்தது என்பது குறித்த விரிவான தரவுகளை இந்த விண்கலம் சேகரித்துள்ளது.
பூமியில் இருந்து 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள எல்1 புள்ளியில் இருந்து ஆதித்யா எல்1 இந்த மாற்றங்களைக் கண்காணித்துள்ளது.
சூரியனில் இருந்து வெளியேறிய அதிவேக பிளாஸ்மா மற்றும் காந்த ஆற்றல் பூமியை நோக்கி வந்தபோது, அவை பூமியின் காந்தப்புலத்துடன் மோதி பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தின.
பூமியின் காந்தக் கவசத்தை உலுக்கிய சூரியப் புயல்; ஆதித்யா எல்1 விண்கலம் கண்டுபிடிப்பு
