சீனா-மாண்டினீக்ரோ தூதாண்மையுறவு நிறுவப்பட்ட 20வது ஆண்டு நிறைவுக்கு இருநாட்டு அரசுத் தலைவர்கள் வாழ்த்து

சீன அரசு தலைவர் ஷிச்சின்பிங், மாண்டினீக்ரோ அரசு தலைவர் மிலடோவிச் ஆகியோர் இருநாட்டு தூதாண்மையுறவு நிறுவப்பட்ட 20வது ஆண்டு நிறைவையொட்டி,6ஆம் நாள் வாழ்த்துச் செய்திகளைப் பரிமாறிக் கொண்டனர்.

ஷிச்சின்பிங் கூறுகையில், தூதாண்மையுறவு நிறுவப்பட்ட 20 ஆண்டுகளில், இருநாடுகளும் எப்போதும் ஒன்றையொன்று மதித்து, சமமான முறையில் நடத்தி, ஒன்றுக்கொன்று நன்மை தந்து கூட்டாக வெற்றி பெற்று வருகின்றன என்றார். பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பை ஆழப்படுத்தவும், இருநாட்டுறவை புதிய நிலைக்கு உயர்த்தவும், இருநாட்டு மக்களுக்கும் மேலும் பயனளிக்கவும், மிலடோவிச்சுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகவும் தெரிவித்தார்.

மிலடோவிச் கூறுகையில், இருநாட்டு தூதாண்மையுறவு நிறுவப்பட்ட 20வது ஆண்டு நிறைவை வாய்ப்பாக கொண்டு, சீனாவுடனான நட்புறவை மேலும் ஆழப்படுத்தவும், பல்வேறு துறைகளிலும் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும், உலக அமைதி மற்றும் வளர்ச்சியை ஊக்குவிப்பதில் நேர்மறையான பங்களிப்பை ஆற்றவும் மாண்டினீக்ரோ விரும்புகிறது என்று தெரிவித்தார்.

You May Also Like

More From Author