ஜப்பான் அரசு வெளியிட்ட 2025ம் ஆண்டு தற்காப்பு வெள்ளையறிக்கை, பாதுகாப்புக்கான கவலையைத் தொடர்ந்து மிகைப்படுத்தியுள்ளது. இதன் வெளியீடும், ஜப்பான் அரசின் விரிவாக்குவதற்கான பேராசையும், ஜப்பானின் பாதுகாப்பு கருத்து மீது, சர்வதேச அளவில் அதிக கவலை மற்றும் நம்பிக்கையின்மை ஏற்பட்டுள்ளன.
சீன ஊடகக் குழுமத்தின் சிஜிடிஎன் நிறுவனம், இது குறித்து மேற்கொண்ட பொது மக்கள் கருத்து கணிப்பில், ஜப்பானின் செயல்களுக்கு விழிப்புடன் இருக்க வேண்டும் என்று 92 விழுக்காட்டினர்கள் தெரிவித்தனர். 2025 நிதியாண்டில் ஜப்பானின் பாதுகாப்பு வரவுச் செலவு, 8.7 இலட்சம் கோடி யென்னை எட்டி, புதிய உச்ச பதிவை உருவாக்கியது. ஜப்பான் அரசு, தனது அரசியல் அமைப்பு சட்டத்தையும், போருக்குப் பின் உலகிற்கு அளித்த வாக்குறுதியையும் மீறியுள்ளது என்று 76.2 விழுக்காட்டினர்கள் குற்றம் சாட்டியதாக இக்கருத்து கணிப்பின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.