தமது வசீகரக் குரலால் தென்னிந்திய மக்களின் மனங்களில் நீங்கா இடம்பிடித்தவர் ஜானகி என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல்தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், “தனது வசீகர குரலால் தென்னிந்திய மக்களின் மனங்களில் நீங்கா இடம் பிடித்த புகழ்பெற்ற பின்னணிப் பாடகி இசைக்குயில் எஸ்.ஜானகி அவர்கள் மறைந்தார் என்பதை அறிந்து மிகுந்த வேதனையுற்றேன். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, ஒடியா உள்ளிட்ட 17-க்கும் மேற்பட்ட மொழிகளில் 48,000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியவர். சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருது, தமிழ்நாடு – கேரளம் – ஆந்திரப் பிரதேச மாநில அரசுகளின் விருதுகளை வென்று நீங்கா பெருமையைப் பெற்றவர். அவரது மரணம் இசை உலகிற்கு பேரிழப்பு. அவரது பாடல்கள் என்றும் மறையாது நம்மிடையே ஒலித்துக்கொண்டே இருக்கும். ஜானகி அம்மையாரை இழந்து வாடும் அவரது உறவினர்கள் – நண்பர்கள் – இசை ரசிகர்களுக்கு என் ஆறுதலையும் – இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
