ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான சீன மக்களின் எதிர்ப்புப் போராட்டம் மற்றும் உலகின் பாசிசவாத எதிர்ப்பு போர் வெற்றி பெற்ற 80வது ஆண்டு நிறைவு கூட்டத்தில், சுமார் 30 ஐரோப்பிய நாடுகளின் 50 தலைவர்கள், முன்னாள் தலைவர்கள், உயர்நிலை அதிகாரிகள், சீனாவுக்கான தூதர்கள், நட்பு பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொள்ளவுள்ளனர். வரலாற்றின் நினைவைக் கூட்டாகப் பேணிக்காத்து, அமைதி மற்றும் நியாயத்தைப் பாதுக்காக்கும் விருப்பமும் மனவுறுதியும், வெளிக்காட்டப்பட்டுள்ளன என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் குவோ ஜியா குன் 28ம் நாள் தெரிவித்தார்.
அமைதியை நேசிக்கும் அனைத்து நாடுகளுடனும் மக்களுடனும் இணைந்து, சரியான வரலாற்று கருத்தைக் கொண்டு, 2வது உலக போர் வெற்றியின் சாதனைகளையும், போருக்குப் பிந்தைய சர்வதேச ஒழுங்கையும், உலகின் அமைதி மற்றும் நிதானத்தையும் பேணிக்காக்க சீனா விரும்புகிறது என்றும் அவர் தெரிவித்தார்.