கம்போடிய மற்றும் தாய்லந்து வெளியுறவு அமைச்சர்களுடனான தொலைபேசி தொடர்பு

சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, 18ஆம் நாள், கம்போடிய துணை தலைமை அமைச்சரும் வெளியுறவு அமைச்சருமான ப்ராங் ஸ்ரோஸ் மற்றும் தாய்லந்து வெளியுறவு அமைச்சர் சிஹாசாகுடன் முறையே தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார். எல்லை பகுதி மோதலின் நிலைமையை இருவரும் வாங் யீவுக்கு அறிமுகப்படுத்தியதோடு, போர் நிறுத்தம் பற்றிய விருப்பங்களை தெரிவித்தனர்.

வாங் யீ கூறுகையில்,

கம்போடிய மற்றும் தாய்லந்தின் அண்டை நாடாகவும் நண்பராகவும், இரு நாடுகளுக்கிடையிலான மோதலைப் பார்க்க சீனா விரும்பவில்லை. இதில் பொது மக்களின் உயிரிழப்புக்கு வருத்தம் தெரிவிக்கிறோம். சீன வெளியுறவு அமைச்சகத்தின் ஆசிய விவகாரங்களின் சிறப்புத் தூதர், இந்த இரு நாடுகளுக்குச் சென்று, தொடர்பு மேற்கொள்கின்றார். இரு நாடுகளுக்கிடையிலான அமைதியை மீட்டெடுப்பதற்கு சீனா பங்காற்றும். இரு நாடுகளிலுள்ள சீன திட்டப்பணிகள் மற்றும் சீனர்களின் பாதுகாப்பை இரு நாடுகள் பேணிக்காத்து, சீனா இரு நாடுகளுடனான உறவுக்கு ஒரு சிலர் அவதூறு கூறுவதை எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றார்.

Please follow and like us:

You May Also Like

More From Author