சீனச் சரக்கு போக்குவரத்து மற்றும் கொள்வனவுச் சம்மேளனம் இவ்வாண்டின் ஜனவரி முதல் ஜூலை வரையான சரக்குப் போக்குவரத்துத் தரவுகளை இன்று வெளியிட்டது.
சரக்குப் போக்குவரத்துத் தேவை மீட்சி போக்கு நிதானமானது என்பது இத்தரவுகள் காட்டியுள்ளன.
ஜனவரி முதல் ஜூலை மாதம் வரை, சீனச் சரக்குப் போக்குவரத்தின் மொத்தத் தொகை 1கோடியே 97லட்சத்து 70ஆயிரம் கோடி யுவானை எட்டி கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட, 5.5விழுக்காடு அதிகரித்துள்ளது.
ஜூலை மாதத்தின், சரக்குப் போக்குவரத்தின் மொத்த தொகை கடந்த ஆண்டின் ஜூலையை விட, 5.3விழுக்காடு அதிகரித்துள்ளது. இவ்விகிதம் ஜூன் மாதத்தை விட, 0.1விழுக்காடு புள்ளி அதிகரித்தது. இது கடந்த 4 மாதங்களாக நீடித்த வீழ்ச்சிப் போக்கை முடித்துவைத்து, மீண்டும் அதிகரிக்கும் போக்குக்கு மாறியுள்ளது.
அதோடு, ஜூலை மாதம் முதல், சீனத் தொழிற்துறைத் தயாரிப்புப் பொருட்களின் போக்குவரத்தில் நிலைப்புத் தன்மை குறிப்பிட்டளவில் அதிகரித்துள்ளது.