சிலி அரசுத் தலைவரின் அதிகார ஒப்படைப்பு விழாவில் ஷிச்சின்பிங்கின் சிறப்புத் தூதர் பங்கெடுப்பு

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் சிறப்புத் தூதரும், சீன உறைவிடம் மற்றும் நகர-கிராம வளர்ச்சி அமைச்சருமான நி ஹோங் உள்ளூர் நேரப்படி மார்ச் 11ஆம் நாள், சிலி அரசுத் தலைவரின் அதிகார ஒப்படைப்பு விழாவில் பங்கெடுத்தார்.

10ஆம் நாளில், அந்நாட்டின் தலைநகர் சான் டியாகோவில், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அந்நாட்டின் அரசுத் தலைவர் காஸ்த், தனது பதவிக் காலம் நிறைவடைந்த அரசுத் தலைவர் போரிக் ஆகியோருடன் நி ஹோங் முறையே சந்திப்பு நடத்தினார்.

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் சிறப்பு தூதரை அனுப்புவதற்கு காஸ்த் நன்றி தெரிவித்தார். சீனாவுடனான உறவை வளர்த்து, ஒரே சீனா எனும் கொள்கையில் ஊன்றி நின்று வருவது சிலி நாட்டின் கொள்கையாகும். இந்த்த் தூதாண்மையின் பாரம்பரியத்தைப் புதிய அரசு தொடரும்  என்று அவர் தெரிவித்தார்.

You May Also Like

More From Author