இவ்வாண்டின் முற்பாதியில் சீனாவின் மொத்த உள் நாட்டு உற்பத்தி மதிப்பு அதிகரிப்பு

Estimated read time 1 min read

 

சீனத் தேசியப் புள்ளிவிவரப் பணியகம் ஜூலை 15ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, முதற்கட்ட கணக்கீட்டின்படி, இவ்வாண்டின் முற்பாதியில், சீனாவின் மொத்த உள் நாட்டு உற்பத்தி மதிப்பு 69 லட்சத்து 57 ஆயிரத்து 40 கோடி யுவானை எட்டி, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 4.7 விழுக்காடு அதிகமாகும்.

மேலும், சீனாவின் கோடைகாலத் தானியங்களின் மொத்த விளைச்சல் 150.75 மில்லியன் டன்னை எட்டி, கடந்த ஆண்டில் இருந்ததை விட 0.7 விழுக்காடு அதிகமாகும். ஆண்டுக்கு 2 கோடி யுவானுக்கு அதிகமான வருமானமுடைய தொழில் நிறுவனங்களின் அதிகரிப்பு மதிப்பும், சேவை தொழிலின் அதிகரிப்பு மதிப்பும் கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட முறையே 5.4 மற்றும் 5.2 விழுக்காடு அதிகமாகும்.

தவிரவும், நுகர்வோர் விலைக் குறியீடு கடந்த ஆண்டில் இருந்ததை விட 1.0 விழுக்காடு அதிகமாகும். வேலை வாய்ப்பு நிலைமை ஒட்டுமொத்தமாக நிதானமான நிலையில் உள்ளது. மக்களின் வருமானம் சீராக அதிகரித்து வருகிறது.

பொதுவாக, இவ்வாண்டின் முற்பாதியில் தேசியப் பொருளாதாரம் சீரான வரம்புக்குள் இயங்கி வருகிறது. புதிய தர உற்பத்தித் திறன் வலிமை அடைந்து வருவதுடன், உயர்தர வளர்ச்சி புதிய மற்றும் சிறந்த திசையில் செல்கிறது என்று சீனத் தேசியப் புள்ளிவிவரப் பணியகத்தின் துணைத் தலைவர் மௌ ஷெங்யுன் தெரிவித்தார்.

You May Also Like

More From Author