தென்காசி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக குற்றால அருவிகளில் தொடர்ந்து 5வது நாளாக இன்றும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை தமிழ்நாடு முழுவதும் பரவலாக பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குகிறது. இதன் காரணமாக அருவிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனிடையே இன்றும், நாளையும் நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலை பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் அதிகனமழையும், திருநெல்வேலி மாவட்ட மலை பகுதிகள், தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், குற்றால அருவிகளில் தொடர்ந்து 5வது நாளாக இன்றும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் மழை விட்டு விட்டு பெய்து வரும் நிலையில், இன்றும் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
