17வது துணை ஜனாதிபதி தேர்தலுக்கான அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் (ECI) அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
முன்னதாக, 2022 முதல் பதவியில் இருந்த ஜகதீப் தன்கர் நடப்பு பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாள் அன்று உடல் நலக்குறைவை காரணம் காட்டி பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
இதையடுத்து, தற்போது தேர்தல் ஆணையம் புதிய துணை ஜனாதிபதி தேர்தலை அறிவித்துள்ளது.
தேர்தல் ஆணைய அறிவிப்பின் படி, வாக்குப்பதிவு செப்டம்பர் 9, 2025 (செவ்வாய்கிழமை) அன்று நடைபெறும்.
இதன் மூலம், இந்தியாவின் அடுத்த துணை ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான அரசியலமைப்பு செயல்முறை அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது.
துணை ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டது தேர்தல் ஆணையம்
