ஜனவரி மற்றும் பிப்ரவரியில் 329.6 எட்டிய சீன விரைவு அஞ்சல் வளர்ச்சி குறியீடு

2024ஆம் ஆண்டின் ஜனவரி மற்றும் பிப்ரவரியில் சீன விரைவு அஞ்சல் வளர்ச்சிக் குறியீடு பற்றிய அறிக்கையைச் சீனத் தேசிய அஞ்சல் பணியகம் 15ஆம் நாள் வெளியிட்டது.

ஜனவரி மற்றும் பிப்ரவரியில் சீன விரைவு அஞ்சல் வளர்ச்சிக் குறியீடு 329.6 எட்டியுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட, அது 26.7விழுக்காடு அதிகமாகும். இவ்விரு மாதங்களில் சீன விரைவு அஞ்சல் துறை சீரான வளர்ச்சியடைந்துள்ளது. சந்தை அளவு வேகமாக அதிகரித்துள்ளது.

விடுமுறை காலத்தில் ஒருங்கிணைப்புடனும் பாதுகாப்பாகவும் இயங்கி வருகிறது.
ஜனவரி மற்றும் பிப்ரவரியில் வசந்த விழா விடுமுறையால், விடுமுறைப் பொருளாதாரம் பெரிதும் தூண்டியுள்ளது.

ஜனவரியில் வசந்த விழாவுக்கான பொருட்களின் நுகர்வு பெரிதும் அதிகரித்ததுடன், அனுப்பப்பட்ட விரைவு அஞ்சல் பொதிகளின் மொத்த எண்ணிக்கை 1470கோடியை எட்டியுள்ளது. நாளுக்கு 47கோடிக்கும் அதிகமான விரைவு அஞ்சல் பொதிகள் ஏற்றிசெல்லப்பட்டன.

You May Also Like

More From Author