ஹாங்காங் தொடர்பான தேசிய அவசர நிலையை நீடிக்காதது என்ற அமெரிக்க முடிவுக்கு சீனா பதில்

ஹாங்காங் தொடர்பான தேசிய அவசர நிலையை அமெரிக்கா நீடிக்காதது குறித்து சீன வணிக அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜூலை 17ஆம் நாள் கூறுகையில், அமெரிக்காவின் இம்முடிவு, இருதரப்பு பொருளாதார மற்றும் வர்த்தக கலந்தாய்வில் எட்டப்பட்ட ஒத்த கருத்துக்களை நிறைவேற்றுவதில் அது மேற்கொண்டுள்ள ஒரு முக்கியமான முடிவாகும். இதனை சீனா பாராட்டுகிறது என்று தெரிவித்தார்.

மாட்ரிட்டில் நடைபெற்ற சீன-அமெரிக்க பொருளாதார மற்றும் வர்த்தக கலந்தாய்வில், ஹாங்காங், முதலீடு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து அமெரிக்கா வாக்குறுதி அளித்துள்ளது. 13936ஆவது செயல் ஆணையில் ஹாங்காங் தொடர்பான தேசிய அவசர நிலை இவ்வாண்டில் காலவதியான பிறகு நீடிக்கப்படாமல் முடிவுக்கு வர உள்ளதாக அமெரிக்கா சீனாவிடம் உறுதி அளித்துள்ளது என்று அவர் கூறினார்.

மேலும், ஹாங்காங்கின் நிலைத்தன்மை மற்றும் செழுமையைப் பேணிக்காப்பது சீனா மற்றும் அமெரிக்காவின் கூட்டு நலனுக்கு ஏற்றது என்றும், ஹாங்காங் தொடர்பான அமெரிக்க கொள்கையின் நேர்மறையான மாற்றம், சர்வதேச சமூகத்தின் பொது எதிர்பார்ப்புக்கு பொருத்தமானது என்றும் அவர் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author