முதலீடு மற்றும் வர்த்தகத்திற்கான 25ஆவது சீனச் சர்வதேசப் பொருட்காட்சி செப்டம்பர் 11ஆம் நாள் சியாமென் நகரில் நிறைவு பெற்றது.
நடப்புப் பொருட்காட்சியில் 1154 முதலீட்டுத் திட்டப்பணிகள் கையொப்பமிடப்பட்டுள்ளன. அதன் மொத்த முதலீட்டுத் தொகை 64 ஆயிரத்து 400 கோடி யுவானாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நடப்புப் பொருட்காட்சி அரங்கத்தின் மொத்த நிலப்பரப்பு 1 லட்சத்து 20 ஆயிரம் சதுர மீட்டராகும். முதலீட்டை முன்னேற்றுவதற்கான 100க்கும் மேலான நிகழ்வுகள் நடத்தப்பட்டன.
120க்கும் மேலான நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த பிரதிநிதிக் குழுக்கள் இப்பொருட்காட்சியில் பங்கெடுத்தன.