சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, ஏப்ரல் 2ஆம் நாள், அழைப்பின் பேரில், சௌதி அரேபிய வெளியுறவு அமைச்சர் ஃபைசல் உடன் தொலைபேசியில் தொடர்புகொண்டார்.
அப்போது வாங்யீ கூறுகையில், ஒரு மாத காலமாக நீடித்து வரும் ஈரான் மோதலால் மாபெரும் உயிர் மற்றும் சொத்து இழப்பினை ஏற்படுத்தியுள்ளதோடு, சௌதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளின் பாதுகாப்பு மற்றும் நிதானத்திற்குப் பாதிப்பைக் கொண்டு வந்துள்ளதாகக் கவலை தெரிவித்தார். போர் நிறுத்தத்தை வெகுவிரைவில் நனவாக்குவது என்பது தற்போதைய அவசர கடமையாகும் என்றார்.
அதே நாளில், ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கைக்கான உயர் நிலைப் பிரதிநிதி காலாஸுடன் வாங்யீ தொலைபேசி மூலம் தொடர்புகொண்டார். அப்போது மத்திய கிழக்கு நிலைமை மற்றும் சீன-ஐரோப்பிய உறவு குறித்து இரு தரப்பினரும் கருத்துகளைப் பரிமாறிகொண்டனர்.
அப்போது காலாஸ் கூறுகையில், பிராந்திய பதற்ற நிலைமையைத் தணிவு செய்து, நல்லிணக்கத்தை மேற்கொள்ளும் சீனாவை பாராட்டுகின்றோம் என்றார். அதோடு, வளைகுடா மற்றும் மத்திய கிழக்குப் பிரதேசத்தின் அமைதியையும் நிதானத்தையும் மீட்கும் பொருட்டு சீனா-பாகிஸ்தான் வழங்கிய 5 முன்மொழிவுகளுக்கும் அவர் ஆதரவு தெரிவித்தார். அதே நாளில், ஜெர்மனி வெளியுறவு அமைச்சர் வாட்ஃபூலுடனும் வாங்யீ தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு கருத்துகளைப் பரிமாறிகொண்டார்.
