சீனக் கடற்படையின் தாங்கி கப்பல் விமானம், ஜப்பானின் தற்காப்பு போர் விமானத்தை ரேடாரில் குறிவைத்தது என்று ஜப்பான் பறைசாற்றியது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் டிசம்பர் 7ம் நாள் பதிலளித்தார்.
அவர் கூறுகையில், சீனாவின் இயல்பான இராணுவ நடவடிக்கைகளில் ஜப்பானின் போர் விமானம் அடிக்கடி தலையீடு செய்வது, மிக பெரிய கடல் ஆகாயப் பாதுகாப்பு அபாயமாகத் திகழ்கிறது. ஜப்பானின் எதிர்ப்பை சீனா ஏற்றுக்கொள்ளாமல், அதை நிராகரித்துள்ளது என்று தெரிவித்தார்.
தற்போதைய நிலைமையில், ஜப்பான், ரேடார் குறிவைத்தல் என்பதைப் பரப்புரை செய்து, உண்மையைத் திரித்துக் காட்டி, சர்வதேச சமூகத்தை தவறான வழிக்குக் கொண்டு சென்று, உள்நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது.
இச்செயலுக்கு சீனா எதிர்ப்பு தெரிவிக்கிறது. சீனாவின் இயல்பான பயிற்சியில் தலையிடுவது, அனைத்து பொறுப்பற்ற போலித்தனமான பரப்புரை மற்றும் அரசியல் கட்டுப்பாட்டையும் நிறுத்துமாறு சீனா வேண்டுகோள் விடுத்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
