மலையாள திரையுலகின் மாபெரும் வெற்றி திரைப்படமான ‘திரிஷ்யம்’ படத்தின் மூன்றாம் பாகம், வரும் ஏப்ரல் 2-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் மோகன்லாலின் மகள் விஸ்மயா மோகன்லால், இத்திரைப்படம் குறித்த மிக நீண்ட எதிர்பார்ப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்தத் தகவலைச் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
இயக்குநர் ஜீத்து ஜோசப் மற்றும் மோகன்லால் கூட்டணியில் உருவான ‘திரிஷ்யம்’ மற்றும் ‘திரிஷ்யம் 2’ ஆகிய இரண்டு பாகங்களும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் சாதனைகளைப் படைத்தன.
அதன் தொடர்ச்சியாக உருவாகியுள்ள மூன்றாம் பாகத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
‘ஜார்ஜ்குட்டி’ மீண்டும் வருகிறார்! திரிஷ்யம் 3 ரிலீஸ் தேதி அறிவிப்பு
