போயிங் தரக் கட்டுப்பாட்டில் பிரச்சினைகள் இருக்கின்றன என்று அமெரிக்கப் போக்குவரத்து அமைச்சர் பீட் பட்டிஜீக், கூட்டாட்சி விமான நிர்வாகத்தின் தலைவர் மைக் வைட்டேக்கர் ஆகியோர் அண்மையில் உறுதிப்படுத்தினர்.
62 வயதான ஜான் பார்னெட் போயிங் தொழில் நிறுவனத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக, தரக் கட்டுப்பாட்டு மேலாளராக பணியாற்றியுள்ளார். பயணிகள் விமான உற்பத்தி மற்றும் நிறுவனத்தின் உள் குழப்பம் பற்றி அவர் பலமுறையில் தெரிவித்தார்.
9ஆம் நாள் அவர் ஒரு சரக்குந்தில் இறந்த நிலையில் கண்டறியப்பட்டார். அதே நாளில், அவர் போயிங் தொடர்பான வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் சாட்சியளிக்க வேண்டியிருந்தது.
இவ்வாண்டு முதல், போயிங்கில் தொடர்ச்சியான பாதுகாப்பு பிரச்சினைகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. யு.எஸ். ஃபாக்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியின் படி, ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் மட்டுமே போயிங் விமானத்தில் ஆறு விபத்துக்கள் நிகழ்ந்தன.
போயிங்கின் உற்பத்தி மற்றும் அதில் உள்ள குழப்பம் நீண்டகாலமாக உள்ளது. முக்கியமாக, விமானத் தரத்தின் பதிலாக, போயிங் தொழில் நிறுவனத்தின் பங்குகளில் கவனம் செலுத்தி வருகின்றது.
இத்தொழில் நிறுவனத்தின் தலைவர்கள் அடிக்கடி மாறியுள்ளனர். பொறுப்பேற்கும் நடைமுறை இல்லை என்று ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார்.