உலகின் பணக்காரர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள தொழிலதிபர் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு, 500 பில்லியன் அமெரிக்க டாலரை நெருங்கியுள்ளது.
ஃபோர்ப்ஸ் நிறுவனத்தின் நிகழ்நேர தரவின்படி, இந்திய நேரப்படி வியாழக்கிழமை இரவு 1.25 மணிக்கு, எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 499.5 பில்லியன் டாலர் என பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஒரே நாளில் அவர் சம்பாதித்த சொத்து மதிப்பு $8.3 பில்லியன், டெஸ்லா பங்குகள் விலையிலான கூடிய உயர்வால் ஏற்பட்டது.
இந்த ஆண்டில் மட்டும் டெஸ்லா பங்குகள் சுமார் 14% உயர்ந்துள்ளன. புதன்கிழமையன்று மட்டும் 4% வரை பங்குகள் உயர்ந்ததாக கூறப்படுகிறது.
500 பில்லியன் டாலரை நெருங்கும் எலான் மஸ்க் சொத்து மதிப்பு- Forbes கணிப்பு!
