2026ஆம் ஆண்டு சீனத் திரைப்படங்களின் புதிய சாதனை

Estimated read time 0 min read

2026ஆம் ஆண்டு சீனத் திரைப்படங்களின் மொத்த வசூல் 2000 கோடி யுவானைத் தாண்டியுள்ளது. இச்சாதனையின் மூலம், சீனத் திரைப்படத் துறையில் 3 புதிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

முதலில், இவ்வாண்டு, சீனத் திரைப்படங்களின் வகைகள் பல்வேறுபட்டவை. நகைச்சுவைத் திரைப்படங்கள், யதார்த்தக் கதை திரைப்படங்கள், மர்மத் திரைப்படங்கள், அதிரடி திரைப்படங்கள் முதலியவை, பல்வேறு ரசிகர்களின் விருப்பங்களைப் பூர்த்தி செய்கின்றன.

இரண்டாவதாக, சீனப் பாணி அனிமேஷன் திரைப்படங்கள் வலுவாக வளர்ச்சியடைந்து வருகின்றன. குறிப்பாக இவ்வாண்டின் கோடைகால விடுமுறையில், 10க்கும் மேலான சீனப் பாணி அனிமேஷன் திரைப்படங்கள், திரைப்பட வசூலை நிதானப்படுத்துவதற்கான முக்கிய சக்தியாக மாறியுள்ளன.

மூன்றாவதாக, தொழிலின் சீர்திருத்தம் மற்றும் புத்தாக்கத்துக்குக் கொள்கைகள் துணைப் புரிந்துள்ளன. பல்வேறு இடங்களில் திரைப்படங்கள் பற்றிய பண்பாடு சுற்றுலா துறையுடன் சிறப்பாக ஒருங்கிணைத்துள்ளது. திரைப்படம் பார்ப்பது, சுற்றுலா பயணம், நுகர்வு முதலியவை சேர்ந்து புத்துயிர் அடைந்து வருகின்றன.

You May Also Like

More From Author