ஏமன் பிரச்சினைக்கான ஐ.நா பாதுகாப்புவையின் பொது கூட்டத்தில் சீனத் துணை நிரந்தரப் பிரதிநிதி கெங்சுவாங் 12ஆம் நாள் உரை நிகழ்த்தினார். அப்போது அவர், செங் கடல் போக்குவரத்து பாதுகாப்பைப் பேணிக்காத்து, ஏமன் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு காணுவதை முன்னேற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
தற்போது, ஏமன் நிலைமை அரசியல் தேக்க நிலையில் சிக்கியுள்ளது. பாதுகாப்பு நிலைமை வலுவற்ற நிலையில் உள்ளது. மனித நேய நெருக்கடி மிகவும் கடுமையாக உள்ளது. இஸ்ரேல் மற்றும் ஏமன் ஹொதி ஆயதப் படை ஒன்றுக்கு ஒன்று தாக்குதல் நடத்தி, செங் கடல் பகுதியை பதற்றமான நிலை தள்ளியது. சர்வதேச சமூகம் கூட்டாக முயற்சி செய்து, ஏமன் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு கண்டு, செங் கடல் நிலைமை விரைவில் அமைதி மற்றும் நிதானத்திற்கு மீட்கச் செய்ய வேண்டும் என்றார்.
செங் கடல் போக்குவரத்து பாதுகாப்பைப் பேணிக்காக்க வேண்டும். ஜூலை திங்களில், ஹொதி ஆயுதப் படையினர் இரு சரக்கு கப்பல்கள் மீது நடத்திய தாக்குதலில் உயரிழப்பு ஏற்பட்டது.
இதில் சீனா மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. பல்வேறு நாடுகளின் வணிகக் கப்பல்கள், சர்வதேச சட்டத்தின்படி, செங் கடலில் பயணித்த உரிமைக்கு ஹோதி ஆயுதப் படை மதிப்பளிக்க வேண்டும். வணிக கப்பல்களை தாக்குவதை நிறுத்த வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.
மேலும், அமைதிக்கான முன்னேற்றப் போக்கை விரைவாக முன்னேற்ற வேண்டும். அரசியல் வழிமுறையின் மூலம் ஏமன் பிரச்சினையைத் தீர்த்து, மனித நேய நெருக்கடியைச் சமாளிக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.