சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொதுச் செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷிச்சின்பிங் சமீபத்தில், நிங் சியா ஹுய் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டார்.
அவர் கூறுகையில்,
இப்பிரதேசம் புதிய வளர்ச்சிக் கண்ணோட்டத்தை செயல்படுத்த வேண்டும். சீன தேசப் பொது சமூகத்தை வலுப்படுத்துவதை முக்கிய அடிப்படையாக கொள்ள வேண்டும். மஞ்சள் ஆற்று வடிநிலத்தின் சுற்று சூழல் பாதுகாப்பு, உயர் தரமுள்ள வளர்ச்சி முன்மாதிரி மண்டலத்தை கட்டியமைப்பதை வழிகாட்டலாக கொள்ள வேண்டும். உயர் தரமுள்ள வளர்ச்சியையும் உயர் நிலையான பாதுகாப்பையும் ஒட்டுமொத்தமாக விரைவுபடுத்தி, சீர்திருத்தத்தையும் திறப்புப் பணியையும் பன்முகங்களிலும் ஆழமாக்க வேண்டும். புதிய ரக நகரமயமாக்கம் மற்றும் கிராமப்புறங்களின் மறுமலர்ச்சியைத் தூண்டி, தேசிய ஒருமைப்பாடு மற்றும் கூட்டுச் செழுமை உள்ளிட்ட பணிகளை முன்னேற்றி, செழுமையான பொருளாதாரம், தேசிய இன ஒற்றுமை, எழில் மிக்க சுற்றுச் சூழல், இன்பமான மக்கள் முதலியவை வாய்ந்த நிங் சியாவைக் கட்டியமைக்க வேண்டும். சீனத் தனிச்சிறப்பு வாய்ந்த நவீனமயமாக்கம் குறித்த நிங் சியா புதிய அத்தியாயம் திறந்து வைக்க வேண்டும் என்றார் அவர்.