சீன-மெக்சிகோ வெளியுறவு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, 7ஆம் நாள், பெய்ஜிங் மாநகரில், மெக்சிகோ வெளியுறவு அமைச்சர் வெலஸ்கோவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது வாங்யீ கூறுகையில்,

உலகளாவிய தெற்கு நாடுகளுடன் ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பு என்ற நெடுநோக்குப் பார்வையில், சீன- மெக்சிகோ உறவை சீனா எப்போதும் விரைவுபடுத்தி வருகிறது. வெளிபுற தலையீடுகளை மெக்சிகோ எதிர்ப்பதற்கு சீனா ஆதரவளிக்கிறது. மெக்சிகோவுடன் சேர்ந்து, பல்வேறு துறைகளின் தொடர்பு மற்றும் ஒத்துழைப்புகளை ஆழமாக்கி, சீன-மெக்சிகோ பன்முக நெடுநோக்குக் கூட்டாளியுறவு தொடர்ச்சியாகவும் ஆழமாகவும் வளர்ந்து வருவதையும் சீனா முன்னேற்றும் என்று தெரிவித்தார்.

வெலஸ்கோ கூறுகையில்,

ஒரே சீனா என்ற கோட்பாடு மற்றும் ஐ.நா பொது பேரவையின் 2758ஆவது தீர்மானத்தை மெக்சிகோ உறுதியாக பின்பற்றி வருகிறது. ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர்களின் அதிகாரப்பூர்வமற்ற கூட்டத்தை சீனா நடத்துவதற்கும் வழிக்காட்டலில் பங்காற்றி வருவதற்கும் மெக்சிகோ ஆதரவளிக்கிறது என்று தெரிவித்தார்.

You May Also Like

More From Author