பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஈபிள் கோபுரம், திங்கள்கிழமை அன்று ஊழியர்களின் திடீர் வேலைநிறுத்தம் காரணமாக முற்றிலும் மூடப்பட்டது.
இந்து அமைப்பை சேர்ந்த தூதுக்குழுவினர் மேற்கொண்ட தனியார் பயணத்தின் போது, பெண் ஊழியர்கள் பணியிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டதாக கூறி ஊழியர்கள் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தைக் கையில் எடுத்தனர்.
போச்சசான்வாசி அக்ஷர் புருஷோத்தம் சுவாமிநாராயண் சன்ஸ்தா(BAPS) என்ற அமைப்பின் சார்பில் சுமார் 100 பேர் கொண்ட குழுவினர் ஈபிள் கோபுரத்திற்கு வருகை தந்தனர்.
அப்போது, பெண் ஊழியர்கள் தங்கள் பணிப் பொறுப்புகளிலிருந்து விலக்கப்பட்டு, அவர்களுக்குப் பதிலாக ஆண்கள் பணியமர்த்தப்பட்டதாகவும், குறிப்பிட்ட பகுதிகளைப் பெண்கள் கடக்கத் தடை விதிக்கப்பட்டதாகவும் ‘CGT’ தொழிலாளர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
நிர்வாகத்தின் இந்த உத்தரவு பெண் ஊழியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈபிள் கோபுரத்தில் ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்தம்
