தமிழக பதிவுத் துறையில் அதிரடி மாற்றங்கள்

Estimated read time 0 min read

தமிழக சட்டமன்றத்தில் வணிக வரி மற்றும் பதிவுத் துறை தொடர்பான மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில், பொதுமக்களின் வசதிக்காகவும் நிர்வாகச் சீர்திருத்தங்களுக்காகவும் பல்வேறு முக்கியப் புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி பொதுமக்களுக்கு மேம்பட்ட சேவைகளை விரைவாக வழங்கவும், குறிப்பிட்ட சார்பதிவகங்களில் நிலவும் பணிப்பளுவை பகிர்ந்தளிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதன்படி, ஒரு வருவாய் கிராமம் முழுமையாக ஒரே சார்பதிவக எல்லைக்குள் அமைவதை உறுதி செய்யும் வகையில் ஆட்சி எல்லைகள் மறுசீரமைக்கப்பட உள்ளன.
இந்த மாற்றங்கள் வரும் செப்டம்பர் 15 முதல் நடைமுறைக்கு வரும்.

You May Also Like

More From Author