உலகளாவிய நிர்வாக முன்மொழிவை ஆதரிக்கும் வியன்னாவில் உலகளாவிய நிர்வாக நண்பர்கள் குழு

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் உலகளாவிய நிர்வாக முன்மொழிவை உருவாக்கிய முதலாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, வியன்னாவில் உலகளாவிய நிர்வாக நண்பர்கள் குழு 7ஆம் நாள் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டது. இதில், இவ்வமைப்பின் உறுப்பு நாடுகள் இம்முன்மொழிவுக்கான தங்கள் உறுதியான ஆதரவை மீண்டும் தெரிவித்து, அதன் மூலம் பெற்ற குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பாராட்டின. மேலும், பலதரப்புவாதத்தைப் பேணிக்காப்பதற்கும்,  மேலும் நீதியான மற்றும் நியாயமான உலகளாவிய நிர்வாக அமைப்புமுறையின் கட்டுமானத்தை ஊக்குவிப்பதற்கும் அவை வியன்னாவின் பலதரப்பு தளத்தின் மூலம் வேண்டுகோள் விடுத்தன என்றும் இக்கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நாவை மையமாகக் கொண்ட சர்வதேச அமைப்புமுறையை உறுதியாகப் பேணிக்காக்கவும், சர்வதேசச் சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாக்கவும், ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், உலகளாவிய சவால்களைக் கூட்டாக எதிர்கொள்ளவும், மனிதகுலத்துக்கான பொது எதிர்கால சமூகத்தின் கட்டுமானத்தை ஊக்குவிக்கவும், அனைத்து தரப்புகளுக்கும் இக்கூட்டறிக்கையில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author