பிலிப்பைன்சின் செயல் சீன-ஆசியான் ஒத்துழைப்பைப் பாதிக்க முடியாது: சீனா

பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவர் மார்கோஸ் பதவி ஏற்ற பிறகு, அந்நாட்டின் வலது சாரி சக்தியானது, வெளிப்புற சக்தியுடன் இணைந்து செயல்பட்டு, தென் சீனக் கடல் பகுதியில் பல முறை ஆத்திரமூட்டல் நடவடிக்கைகளை மேற்கொண்டு, பிராந்திய அமைதி மற்றும் நிதானத்திற்குப் பாதிப்பினைக் கொண்டு வந்து கொண்டிருக்கிறது.

ஜூலை 20ஆம் நாளில், சீனாவின் நான்ஷா தீவுகளின் ரென்ஏய் ஜியவோ பகுதி, 23ஆம் நாள், சீனாவின் ஹூவாங்யன் தீவு ஆகிய 2 பகுதிகளில், பிலிப்பைன்ஸ் கப்பல்கள் நுழைந்து சீனக் கப்பல்களின் மீது முதலில் தாக்குதல்களை நடத்தி ஆத்திரமூட்டல் நடவடிக்கைகளை மேற்கொண்டன. இது தொடர்பான காணொளி ஆவணங்களைச் சீனா  வெளியிட்டது. இத்தகைய காணொளிகளின் படி, சீனத் தரப்பு சட்டத்தின்படியே பதில் நடவடிக்கைகளை மேற்கொண்டு கட்டுப்பாட்டுடன் செயல்பட்டன. இதனிடையில் அண்மையில் சீன-ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தின் மூலம் வெளிப்படையான சமிக்கையை வெளியிட்டுள்ளது. நெடுநோக்குத் தொடர்பை வலுப்படுத்தி, பல்வேறு துறைகளிலான ஒத்துழைப்புகளை ஆழமாக்கி, இவ்வாண்டிற்குள், தென் சீனக் கடலுக்கான செயல் கோட்பாட்டை வெகுவிரைவில் எட்டி, தென் சீனக்  கடலின் அமைதியையும் நிதானத்தையும் கூட்டாகப் பேணிக்காக சீனாவுடன் இணைந்து ஆசியானின் பல்வேறு நாடுகள் பாடுபடுவதை  எதிர்பார்க்கின்றன.

தென் சீனக் கடல் பிரச்சினைக்கான சீனாவின் கோட்பாடு மற்றும் நிலைப்பாட்டை சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ இக்கூட்டத்தில் விளக்கிக் கூறினார். தென் சீனக் கடலுக்கான பல்வேறு தரப்புகளின் செயல் அறிக்கையைப் பிராந்திய நாடுகள் பின்பற்றி, வெளிப்புற நாடுகளின் ஆத்திரமூட்டலைச் சமாளிக்க வேண்டும் என்று வாங்யீ வலியுறுத்தினார்.

வாய்ப்புகளைக் கைப்பிடித்து, தலையீடுகளைச் சமாளித்து, சீனாவும் ஆசியானின் நாடுகளும் சொந்த அறிவு மற்றும் ஆற்றலின் மூலம், தென் சீனக் கடல் பிரச்சினையைச் சீராகக் கையாள முடியும். அதோடு, அமைதி, நிதானம், ஒத்துழைப்பு, நட்புறவு ஆகியவை  படைத்த தென் சீன கடலைக் கட்டியமைக்கவும் முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

You May Also Like

More From Author