சீன-கத்தார் தலைமையமைச்சர்கள் சந்திப்பு

சீனத் தலைமையமைச்சர் லீச்சியாங் 7ஆம் நாள் பிற்பகல், பெய்ஜிங் மாநகரில், சீனாவில் பயணம் மேற்கொண்டிருக்கின்ற கத்தார் தலைமையமைச்சரும் வெளியுறவு அமைச்சருமான முகமதுவைச் சந்தித்துரையாடினார்.

இச்சந்திப்பின் போது லீச்சியாங் கூறுகையில்,

மத்திய கிழக்கு வளைகுடா பிரதேசத்தில் சீனாவின் முக்கிய நெடுநோக்குக் கூட்டாளியாக கத்தார் விளங்குகிறது என்றார். ஷிச்சின்பிங் மற்றும் டமிமூர்ஐமிர் ஆகிய இருவரின் கூட்டு வழிகாட்டலின்படி, சீன-கத்தார் நெடுநோக்குக் கூட்டாளியுறவு தொடர்ந்து நிதானமாகவும் சீராகவும் வளர்ந்து வருகிறது. கத்தாருடன் இணைந்து, தொடர்புகளையும் ஒத்துழைப்புகளையும் வலுப்படுத்தி, ஒன்றுக்கு ஒன்று ஆதரவளித்து, இரு தரப்புகளை மேலும் ஆழமாக்குவதை விரைவுபடுத்தி, இரு நாட்டு மக்களுக்கு நன்மை பயக்க வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார்.

மேலும், மத்திய கிழக்கு நிலைமை குறித்து, கத்தார் இணக்க முயற்சி செய்வதற்குச் சீனா ஆதரவளித்து வருகிறது. கத்தார் உள்ளிட்ட பிராந்திய நாடுகள் மற்றும் சர்வதேசச் சமூகத்துடன் சேர்ந்து இடைவிடாமல் பாடுபட்டு, பிராந்திய அமைதியையும் நிதானத்தையும் விரைவில் நனவாக்க சீனா முயற்சி செய்யும் என்றும்  லீச்சியாங் தெரிவித்தார்.

You May Also Like

More From Author