கர்நாடகாவின் ஆலந்த் சட்டசபை தொகுதியில், 6,018 வாக்காளர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க, ஆன்லைன் மூலம் முயற்சிகள் நடந்தன’ என, காங்., – எம்.பி., ராகுல் குற்றஞ்சாட்டினார்.
கர்நாடக தேர்தல் அதிகாரி அன்புகுமார் உடனடியாக இதற்கு மறுப்பு தெரிவித்து விரிவாக விளக்கம் அளித்தார். அதன் விபரம்:
கடந்த 2022ல், ஆலந்த் தொகுதி வாக்காளர் பட்டி யல் தயாரிக்கும் அதிகாரிக்கு, 6,018 வாக்காளர்களின் பெயர்களை நீக்கும்படி ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் வந்தன.
இது சந்தேகத்தை ஏற்படுத்தியதால், இது பற்றி உடனடியாக விசாரிக்கப்பட்டது. களத்திற்கு நேரடியாக சென்று ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன.
அவற்றில் 24 விண்ணப்பங்கள் மட்டுமே உண்மையானவை என்றும், 5,994 விண்ணப்பங்கள் போலியானவை என்றும் தெரிந்தது. இதனால், அந்த விண்ணப்பங்கள் உடனடியாக நிராகரிக்கப்பட்டன.
மேலும், போலியாக வந்த விண்ணப்ப படிவங்களை அனுப்பியவர்கள் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கக் கோரி, தேர்தல் கமிஷன் சார்பில் ஆலந்த் போலீஸ் ஸ்டேஷனில் புகாரும் தரப்பட்டது.
இவ்வாறு அவர் விளக்கம் அளித்திருந்தார்.
இந்நிலையில், ஆன்லைனில் போலியாக வரும் விண்ணப்பங்களை தவிர்க்க, வாக்காளர் பட்டியலில் பெயர்களை நீக்கவோ, சேர்க்கவோ, திருத்தவோ வேண்டுமெனில், ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் போன் எண் தரப்பட வேண்டும் என்பதை தேர்தல் கமிஷன் கட்டாயமாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்காக தேர்தல் கமிஷனின் ஐ.டி., துறை பணியாற்றி வந்ததாகவும், ஆன்லைனில் ஆதார் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் கோரும் திருத்தம் தற் போது மேம்படுத்தப்பட்டுள் ளதாகவும் கூறப்படுகிறது.
ஈரான் விவகாரத்தில் அமெரிக்காவுக்கு தென்கொரியா போதிய ஆதரவு அளிக்கவில்லை என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிருப்தி தெரிவித்துள்ளார். இதையடுத்து, தென்கொரியாவுடன் திட்டமிடப்பட்டிருந்த கூட்டு ராணுவப் [மேலும்…]
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அந்நாட்டில் வாக்காளர் பதிவின் போது குடியுரிமைச் சான்றையும், வாக்களிக்கும் போது புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையையும் கட்டாயமாக்கும் ‘SAVE [மேலும்…]
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சவுதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் இடையே சமீபத்தில் கையெழுத்தான மக்கா கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். [மேலும்…]
வருவாயை காரணம் காட்டி 10 கோஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டுள்ளது. இதுதான் தவெக அரசின் 100 நாள் சாதனையா? என தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். [மேலும்…]
பாஜகவின் தேசிய மகளிரணி தலைவர் பொறுப்பில் இருந்து வானதி சீனிவாசன் விடுவிக்கப்பட்டுள்ளார். பாஜகவின் தேசிய மகளிரணி தலைவர் பொறுப்பில் இருந்து வானதி சீனிவாசன் விடுவிக்கப்பட்டுள்ளார். [மேலும்…]