சீனச் சந்தை மீது நம்பிக்கை கொண்ட அன்னிய முதலீட்டு நிறுவனங்கள்

Estimated read time 0 min read

சீனாவிலுள்ள அன்னிய முதலீட்டுத் தொழில் நிறுவனங்களின் உயர் அலுவலர்கள் பலர் அண்மையில் சீனச் சந்தை மீது நம்பிக்கையைத் தெரிவித்துள்ளனர்.

நேஸ்லெ தொழில் நிறுவனத்தின் சீன விவகாரங்கள் மற்றும் தொடர வல்ல வளர்ச்சி பிரிவின் உயர்நிலை துணை இயக்குநர் ஃபாங் ஜுயுன் டாவ் பேட்டியளிக்கையில், சீன தலைமை அமைச்சர் வழங்கிய அரசு பணியறிக்கை தங்களுக்குப் பெரும் ஊக்கமளித்துள்ளது.

சீனாவின் சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணிகள் தொடர்ந்து விரிவாகி வருவது, அன்னிய முதலீட்டுத் தொழில் நிறுவனங்களுக்கு வழிகாட்டல் மற்றும் உறுதி தன்மை என்ற முறையில் பங்கு ஆற்றி வருகிறது என்று தெரிவித்தார்.

ஏ எக்ஸ் ஏ டியேன் பிங் சொத்து மற்றும் விபத்து காப்பீட்டு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சொ வேய் ஹௌ கூறுகையில், வணிக சுகாதாரக் காப்பீட்டு வகையை விரிவாக்கி, நாட்டின் அடிப்படை மருத்துவக் காப்புறுதியுடன் இணைந்து பொது மக்களின் சுகாதாரத்துக்குப் பங்காற்றுவோம் என்று தெரிவித்தார்.

You May Also Like

More From Author