சீனத் தேசியப் புள்ளிவிவரப் பணியகம் 28ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, இவ்வாண்டின் முதல் 8 மாதங்களில், சீனத் தேசியளவில் ஆண்டுக்கு 2 கோடி யுவானுக்கு அதிகமான வருமானமுடைய தொழில் நிறுவனங்களின் மொத்த இலாபத் தொகை 5 இலட்சத்து 27 ஆயிரத்து 198 கோடி யுவானை எட்டி, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 15.7 விழுக்காடு அதிகரித்துள்ளது.
இக்காலக்கட்டத்தில், சுரங்கத் தொழிலின் இலாபம் 35.1 விழுக்காடும், உற்பத்தித் துறையின் இலாபம் 17.4 விழுக்காடும் அதிகரித்துள்ளன. மின்சாரம், அணல் மின், எரிவாயு, நீர் உற்பத்தி மற்றும் வினியோகத் தொழில் துறையின் இலாபம் 12 விழுக்காடு குறைந்துள்ளது.
மேலும், ஆண்டுக்கு 2 கோடி யுவானுக்கு அதிகமான வருமானமுடைய தொழில் நிறுவனங்களின் இயக்க இலாப விகிதம் 5.66 விழுக்காடாக இருப்பதோடு, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 0.44 விழுக்காட்டு புள்ளிகள் உயர்ந்துள்ளது.
