ஞாயிற்றுக்கிழமை தொடங்கும் ASEAN உச்சிமாநாடு தொடர்பான கூட்டங்களில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி மலேசியா செல்ல வாய்ப்பில்லை என்று இந்த விஷயத்தை நன்கு அறிந்தவர்கள் புதன்கிழமை தெரிவித்தனர்.
இந்தக் கூட்டங்களில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்த வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் செல்வார் என்று அறியப்படுகிறது.
ASEAN (தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கம்) உச்சிமாநாடு அக்டோபர் 26 முதல் 28 வரை கோலாலம்பூரில் நடைபெறும்.
எனினும் இந்த உச்சிமாநாடு தொடர்பான விவாதங்களில் இந்தியாவின் பங்கேற்பு குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை.
இந்தியா டுடே செய்தியின்படி, ASEAN கூட்டங்களில் ஜெய்சங்கர் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்துவார் என்று இந்தியா மலேசியாவிடம் தெரிவித்ததாக செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி virtual முறையில் பங்கேற்க வாய்ப்பு உள்ளது.
மலேசியாவில் நடக்கும் ASEAN மாநாட்டில் பிரதமர் பங்கேற்கப்போவதில்லை எனத்தகவல்
