இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல்களை தூய்மைப்படுத்தும் பணியின் கீழ், Special Integrated Revision -SIR இரண்டாம் கட்டம் இன்று தொடங்க உள்ளது.
தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்கள் மற்றும் UT-களில் இந்த பணி தீவிரமாக நடைபெற உள்ளது.
வாக்காளர் பட்டியலில் உள்ள பிழைகளை சரிசெய்வது, போலியான அல்லது ஒரே பெயரில் பல பதிவுகளை நீக்குவது, வாக்காளர்களின் தரவை புதுப்பிப்பது மற்றும் துல்லியமான பட்டியலை உருவாக்குவது இதன் முக்கிய நோக்கமாகும்.
SIR-ன் முதல் சுற்றில், நாடு முழுவதும் இருந்து சுமார் 1.25 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டனர்.
இன்று தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா, குஜராத், ஒடிசா உள்ளிட்ட 12 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் இரண்டாம் சுற்று SIR நடக்கிறது.
12 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் ‘SIR’ இன்று தொடக்கம்; நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை
