மத்திய அமைச்சரவையில் மாற்றம்: பாஜக-வில் இணைகிறதா திமுக?  

Estimated read time 1 min read

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் 20-க்கும் மேற்பட்ட அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட உள்ளதாகவும், புதிதாக திமுக அதில் இணைய வாய்ப்புள்ளதாகவும் ஹிந்து தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் (தவெக) ஆட்சியை கைப்பற்றியதை தொடர்ந்து, மாநிலத்தின் அரசியல் சூழலில் கணிசமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
தொகுதி வரையறை மசோதாவில் சில நிபந்தனைகளுடன் ஆதரவு அளித்தது, டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடனான சந்திப்புகளில் திமுக எம்பி கனிமொழி பங்கேற்றது போன்ற நிகழ்வுகள் திமுக-பாஜக இடையேயான இணக்கமான போக்கைக் காட்டுவதாகக் கருதப்படுகிறது.
மேலும், “அரசியலில் நிரந்தர எதிரிகள் இல்லை” என மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி சோமு குறிப்பிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

More From Author