திருச்செந்தூர் கோயிலில் தரிசன நேரம் மாற்றம்..!!

Estimated read time 1 min read

பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருவிழா, விடுமுறை, பண்டிகை மற்றும் சுபமுகூர்த்தம் உள்ளிட்ட முக்கிய நாட்களில் பக்தர்கள் வருவது வழக்கம்.

தமிழ்நாட்டின் பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் (Tiruchendur Subramanya Swamy Temple) முருகனின் ஆறுபடை வீடுகளில், இரண்டாம் படை வீடாகத் திகழ்கின்றது. இந்த கோவில் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் அமைந்துள்ளது. சங்க இலக்கியங்களிலும், சிலப்பதிகாரத்திலும் குறிப்பிடப்பட்டுள்ள இக்கோவில், 2000-3000 ஆண்டுகள் வரை பழமை கொண்டதாகக் கருதப்படுகின்றது. முருகப்பெருமானுக்குக் கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள ஒரே கோவில் என்ற சிறப்பையும் பெற்றுள்ளது.

இந்த கோவிலுக்கு நாள்தோறும் உள்ளூரில் மட்டுமின்றி, தமிழ்நாடு, அண்டை மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து கடலில் புனித நீராடி திருச்செந்தூர் முருகனை காண, நீண்டநேரம் வரிசையில் காத்திருந்து முருகனை தரிசனம் செய்து வருகின்றனர். குறிப்பாக, வார இறுதி நாட்கள், செவ்வாய்கிழமை, கிருத்திகை, சஷ்டி போன்ற விசேஷ தினங்களில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அதேபோல் ஒவ்வொரு பௌர்ணமி தினத்தன்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்குள்ள கடற்கரையில் இரவு முழுவதும் தங்கி, அதிகாலையில் முருகனை தரிசனம் செய்து வருகின்றனர்.

திருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்யும் நேரத்தில் மாற்றம்

கட்டண தரிசனத்திற்கு மாலை 6.30 மணி வரையும், பொது தரிசனத்திற்கு இரவு 7 மணி வரையும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்; விஷேச மற்றும் விடுமுறை நாட்களில் தரிசன நேரம் மாறுதலுக்கு உட்பட்டது என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

You May Also Like

More From Author