இந்தியா-பங்களாதேஷ் எல்லையில் முள்வேலிக்கு பதிலாக பாம்புகளும், முதலைகளும் வரப்போகின்றனவா?  

Estimated read time 1 min read

இந்தியா-பங்களாதேஷ் எல்லையில் ஊடுருவலைக் கையாள்வதற்காக, எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) ஒரு வழக்கத்திற்கு மாறான யோசனையை ஆலோசித்து வருகிறது.
பாரம்பரிய வேலி அமைப்பது சாத்தியமில்லாத ஆற்றுப் பகுதிகள் மற்றும் சதுப்பு நிலங்களில், பாம்புகள் மற்றும் முதலைகள் போன்ற ஊர்வனவற்றை இயற்கைத் தடுப்புகளாகப் பயன்படுத்த அந்தப் படை பரிசீலித்து வருவதாக, உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் உத்தரவை பார்த்துள்ள ‘தி ஃபெடரல்’ செய்தி வெளியிட்டுள்ளது.
4,096 கி.மீ நீளமுள்ள இந்த எல்லையில், ஏறக்குறைய 175 கி.மீ தூரத்திற்கு இத்தகைய நிலப்பரப்பு இருப்பதால், வெறும் பௌதீகத் தடைகள் மூலம் சட்டவிரோத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவது கடினமாக உள்ளது.

You May Also Like

More From Author