சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி அரசியல் குழுவின் பொதுச் செயலாளரும், சீன அரசுத் தலைவரும், மத்திய ராணுவ ஆணையத் தலைவருமான ஷிச்சின்பிங் 19ஆம் நாள் மக்கௌவிலுள்ள அறிவியல் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு பயணம் மேற்கொண்டார்.
ஷிச்சின்பிங் இப்பல்கலைக்கழகம் மற்றும் மக்கெளவின் உயர் நிலை கல்வி வளர்ச்சி குறித்து அறிந்து கொண்டு, கல்வி மூலம் பொருளாதாரம் மற்றும் சமூகத்தின் வளர்ச்சியை மக்கெள முன்னேற்றுவதைப் பாராட்டினார்.
இப்பயணத்தின் போது, சீனப் பாரம்பரிய மருந்துகளின் தர ஆய்வுக்கான தேசிய ஆய்வகம், சந்திரன் மற்றும் கிரக அறிவியலுக்கான தேசிய ஆய்வகம் ஆகியவற்றின் நிலைமையை கேட்டறிந்த அவர், இப்பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அறிவியல் ஆய்வாளர்களுடன் அன்புடன் பரிமாற்றம் மேற்கொண்டார்.
அன்று காலை, அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் மனைவி பெங் லீயுவன் அம்மையார் மக்கெள அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டார். மக்கெளவின் வரலாற்றுப் போக்கு, சீன மற்றும் மேலை நாட்டு நாகரிகங்கள் ஒன்றிணைந்த கட்டிடக் கலை, தொழில் மற்றும் பண்பாடுகள் முதலியவை குறித்து அவர் ஆழமாக அறிந்து கொண்டு, உள்ளூர் பொருள் சாராப் பண்பாட்டு மரபுச் செல்வ வாரிசுகளுடன் உரையாடினார்.