பாகிஸ்தான் மற்றும் சவுதி அரேபியா இடையே சமீபத்தில் கையெழுத்தான மூலோபாய பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தை (Strategic Mutual Defence Agreement) இந்தியா உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக அறிவித்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தின்படி, இரு நாடுகளில் ஒன்று தாக்கப்படும்பட்சத்தில், அது மற்றொன்றின் மீதான தாக்குதலாகக் கருதப்படும்.
சவுதி அரேபியாவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீஃப், இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
சில தகவல்களின்படி, இந்த ஒப்பந்தம் பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை சவுதி அரேபியா பயன்படுத்துவதற்கான வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
இந்த ஒப்பந்தத்தின் நோக்கம், எந்தவொரு தாக்குதலுக்கும் எதிராகப் பரஸ்பர பாதுகாப்பை வலுப்படுத்துவதே என்று சவுதி பிரஸ் ஏஜென்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான்-சவுதி பாதுகாப்பு ஒப்பந்தத்தை ஆய்வு செய்வதாக இந்தியா அறிவிப்பு
