போட்ஸ்வானாவின் அரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டுமா போகோவுக்கு ஷி ச்சின்பிங் வாழ்த்து

போட்ஸ்வானாவின் அரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டுமா போகோவுக்கு சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் நவம்பர் 5ஆம் நாள் வாழ்த்து தெரிவித்தார்.

ஷி ச்சின்பிங் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளாக, இரு நாட்டுறவு சீராக வளர்ச்சியடைந்து வருகிறது. அடிப்படை வசதிக் கட்டுமானம், தூய்மையான எரியாற்றல், மருத்துவம் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் இரு நாட்டு ஒத்துழைப்புகள் சிறந்த சாதனைகளைப் பெற்றுள்ளன என்றார்.

மேலும், சீன-போட்ஸ்வான உறவுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறேன். அரசுத் தலைவர் போகோவுடன் இணைந்து, இரு நாட்டு நெடுநோக்கு கூட்டாளி உறவை மேலும் உயர் நிலைக்கு முன்னேற்றி, இரு நாட்டு மக்களுக்கு மேலதிக நலன்களை வழங்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

You May Also Like

More From Author