வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை- முதல்வர் விஜய் நாளை ஆலோசனை

Estimated read time 0 min read

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதலமைச்சர் விஜய் நாளை ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதலமைச்சர் விஜய் நாளை ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். நாளை நண்பகல் 12 மணியளவில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில், டெல்டா மற்றும் கடலோர மாவட்ட ஆட்சியாளர்கள் காணொளி காட்சி வாயிலாக ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர். பேரிடர் மேலாண்மை துறை சுகாதாரத்துறை மின்துறை போக்குவரத்து துறை உள்ளிட்ட துறைகளின் ஒருங்கிணைந்து செயல்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படவுள்ளது. நீர்நிலைகளை தூர்வாருதல், ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, பலவீனமான மின் கம்பங்களை சீரமைத்தல் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது. மீட்பு உபகரணங்கள் மீட்பு படையினரின் தயார் நிலை தேவையான பகுதிகளில் மீட்பு படையினரை முன்கூட்டியே நிலை நிறுத்துதல் பற்றி விவாதிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author