தமிழக அரசின் ஐந்து மாத வருவாய் ஒரு லட்சம் கோடி தாண்டியது. செலவு ரூ.1.38 லட்சம் கோடியானது.

நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான கடந்த 5 மாதங்களில் தமிழக அரசின் வருவாய், ஒரு லட்சத்துது 17 ஆயிரத்து 791 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே காலத்தில் செலவு ஒரு லட்சத்து 38 ஆயிரத்துக்கு 140 கோடி ரூபாயக உள்ளதால் 20 ஆயிரத்து 349 கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் 30 ஆயிரம் கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது.
மாநில ஜிஎஸ்டி மூலம் 36 ஆயிரம் கோடி, பதிவுத்துறை மூலம் 10,000 கோடி, மாநில ஆயத்துறை மூலம் 2000 கோடி, மத்திய அரசின் பங்கு 24 ஆயிரம் கோடி என மொத்தம் ஒரு லட்சம் கோடியை தாண்டி உள்ளது. செலவில் கடன்களுக்காக செலுத்தப்பட்ட வட்டியின் பங்கு 25 ஆயிரத்து 991 கோடி ரூபாய், ஓய்வூதியத்தின் பங்கு 21 ஆயிரத்து 8 கோடி ரூபாயாக அதிகளவில் உள்ளது. கடந்த மாதத்தில் தமிழக அரசு கடன் எதுவும் வாங்கவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.
