பங்களாதேஷில் நடந்த ராணுவ ஜெட் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க, தீக்காய நிபுணர்கள் மற்றும் செவிலியர்கள் அடங்கிய குழுவை டாக்காவிற்கு அனுப்புவதாக இந்தியா செவ்வாய்க்கிழமை இரவு அறிவித்தது.
வங்கதேசத் தலைநகர் டாக்காவின் உத்தரா பகுதியில் உள்ள மைல்ஸ்டோன் பள்ளி மற்றும் கல்லூரி மீது திங்கட்கிழமை இராணுவ ஜெட் விமானம் மோதியதில் 25 குழந்தைகள் உட்பட குறைந்தது 31 பேர் கொல்லப்பட்டனர்.
விபத்தில் பெரும்பாலானவர்களுக்கு தீக்காயங்கள் ஏற்பட்டன.
இந்த துயரமான விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்ததோடு, ஆதரவு மற்றும் உதவிக்கான உறுதிமொழிகளையும் தெரிவித்தார்.
“தீக்காய சிறப்பு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் குழு, பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க விரைவில் டாக்காவிற்கு செல்ல உள்ளது” என்று வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ராணுவ விமான விபத்துக்குப் பிறகு, தீக்காய நிபுணர்கள் குழுவை டாக்காவிற்கு அனுப்பும் இந்தியா
