2026 சர்வதேச அடிப்படை அறிவியல் மாநாடு பெய்ஜிங்கில் துவக்கம்

2026 சர்வதேச அடிப்படை அறிவியல் மாநாடு அண்மையில் பெய்ஜிங்கில் துவங்கியுள்ளது.

ஆகஸ்ட் 10ஆம் நாள் முதல், கணிதவியல் இரவு, இயற்பியல் இரவு, பொறியியல் இரவு, அடிப்படை அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு கருத்தரங்கு உள்ளிட்ட பல்வகை நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறவுள்ளன. பீல்ட்ஸ் பதக்கம், டியூரிங் விருது ஆகியவற்றைப் பெற்றவர்களுக்கும் இதில் கலந்துகொள்கின்றனர்.

அடிப்படை அறிவியலில் கவனம் செலுத்தி, மனித குலத்தின் எதிர்காலத்திற்கு வழிகாட்டல் என்பது இம்மாநாட்டின் தலைப்பாகும். ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அறிஞர்கள், அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபடும் பணியாளர்கள், இளைஞர் மாணவர்கள் முதலியோரும் இதில் பங்கெடுத்துள்ளனர். இம்மாநாடு ஆகஸ்ட் 21ஆம் நாள் வரை நடைபெற உள்ளது.

You May Also Like

More From Author