அமெரிக்க இறக்குமதி மீதான சுங்கவரியை சரிப்படுத்த சீனா அறிவிப்பு

சீன-அமெரிக்க அரசுத் தலைவர்கள் வாஷிங்டன் சந்திப்பில் எட்டியுள்ள ஒத்த கருத்துக்களை நடைமுறைப்படுத்தும் வகையில், சீன அரசவையின் சுங்கவரி ஆணையம் சீன மக்கள் குடியரசின் சுங்கவரி சட்டம் உள்ளிட்ட சட்ட விதிகள் மற்றும் சர்வதேச சட்டத்தின் அடிப்படை கோட்பாடுகளின்படி அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இந்த அறிக்கையில், அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட இறக்குமதிப் பொருட்களின் மீதான கூடுதல் வரி வசூலிப்பு நடவடிக்கையை சரிப்படுத்தி, 2026ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் நாள் பிற்பகல் 1 மணி 1 நிமிடத்திலிருந்து 24 சதவீத சுங்கவரி வகிதத்தைத் தொடர்ந்து 2 மாதங்களாக இடைநிறுத்தம் செய்து, 10 சதவீத சுங்கவரி விதிகம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செலுப்படியாகாத சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டத்திலுள்ள சுங்கவரிக்குப் பதிலாக தனது வர்த்தக சட்டப் பிரிவு 301-இன் கீழ் செயல்பட திட்டமிட்டதாக அமெரிக்கா பலமுறை தெரிவித்துள்ளது. இதனை கவனித்துள்ள சீனா, அமெரிக்காவின் பின்தொடர் நடவடிக்கைகளில் தொடர்ந்து கவனம் செலுத்தி, நிலவரத்திற்கு ஏற்ப அதன் மீதான சுங்கவரியைச் சரிப்படுத்தும். அமெரிக்கா மீதான கூடுதல் சுங்கவரி வசூலிப்பை சீனா தொடர்ந்து இடைநிறுத்தம் செய்வது, இருநாட்டு தொழில் நிறுவனங்களின் ஒத்துழைப்புக்கு நிலையான, கணிக்க கூடிய கொள்கை சூழ்நிலையை வழங்கவும், சீன-அமெரிக்க பொருளாதார மற்றும் வர்த்தக உறவின் சீரான வளர்ச்சியை முன்னேற்றவும் துணைபுரியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author