139ஆவது சீன இறக்குமதி ஏற்றுமதிக் கண்காட்சியில் 245000 வெளிநாட்டு கொள்முதலாளிகள் வருகை

Estimated read time 0 min read

ஏப்ரல் 27ஆம் நாள் 17:00மணி வரை, 139ஆவது சீன இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கண்காட்சியில் நடைபெற்ற 2 ஆஃப்லைன் பொருட்காட்சிகளில் மொத்தமாக 219 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 2லட்சத்து 45ஆயிரம் வெளிநாட்டு கொள்முதலாளிகள் கலந்து கொண்டுள்ளனர். கடந்த ஆண்டை விட, இவ்வெண்ணிக்கை 2.2விழுக்காடு அதிகரித்துள்ளது.

நடப்புக் கண்காட்சியின் 3ஆவது ஆஃப்லைன் பொருட்காட்சி மே முதல் நாள் தொடங்கி 5ஆம் நாள் வரை நடைபெறவுள்ளது. பொம்மைகள், கர்ப்பினி மற்றும் குழந்தைக்கான பொருட்கள், நெசவுப் பொருட்கள், எழுதுபொருட்கள், ஆரோக்கியம் மற்றும் பொழுதுபோக்கு முதலிய வகைகளின் பொருட்கள் இதில் காட்சிக்கு வைக்கப்படும். அதோடு, செயல்திறன் மற்றும் அறிவியல் தொழில்நுட்பம் உடைய துணிகளுக்கான சிறப்பு காட்சியிடம் அதில் புதிதாக நிறுவப்படும்.

Please follow and like us:

You May Also Like

More From Author