உலகளாவிய தொழில் நுட்பத்தில் முன்னணியில் ஏ.ஐ மாதிரிகளை  தயாரிப்பதில் சீனா  மிகுந்த கவனம்

அமெரிக்காவின் புளூம்பர்க் உள்ளிட்ட செய்திஊடகங்கள், அண்மையில், சீனாவின் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியிலும், குறிப்பாக உலகளாவிய தொழில் நுட்பத்தில் முன்னணியில் ஏ.ஐ மாதிரிகளை சீனா தயாரித்து வருவதிலும் அவை மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றன.

இவை, சீனாவின் பெரிய அளவிலான புத்தாக்கத்தின் வலிமையான சான்றுகளாகும். புத்தாக்கம் என்பது, பிரதிபலிக்கப்படுதல் பரவல் செய்யப்படுதல், நடைமுறையாக்கத்தில் செயல்படுத்தப்படுதல் உள்ளிட்ட முறைமை சார் திறன்களை உருவாக்குவதை அடிப்படையாக கொண்டது.

சீனாவின் வலிமையான தயாரிப்பு ஆற்றல், தொடர்ந்து ஏற்படுத்திய தொழில் நுட்பத்தின் புத்தாக்கம், தொடர்ச்சியான வெளிநாட்டுத் திறப்பு நடவடிக்கைகள் முதலியவற்றின் மூலம், சீனப் பொருளாதார வளர்ச்சி முறை மாற்றம் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. தவிரவும், உலகப் பொருளாதாரத்தின் அதிகரிப்பு மற்றும் ஒத்துழைப்புக்கான புத்தாக்க வளர்ச்சி வாய்ப்புகளும் இதன் மூலம் விரிவாக்கப்பட்டுள்ளன. உலகின் கவனத்தை ஈர்த்துள்ள சீனாவின் புத்தாக்க ஆற்றல், உலகத்திற்கு வளர்ச்சி வாய்ப்புகளை சீனா உருவாக்கி வரும் மற்றொரு முக்கிய முன்மாதிரியாகும்.

மக்க்களின் சிறந்த வாழ்க்கைக்கான இடைவிடாத தேடலையே புத்தாக்கம் வெளிக்காட்டியுள்ளது. உலகத் தொழில் துறையின் மாற்றம் மற்றும் அறைகூவல்களை எதிர்நோக்கும் வகையில், உலகத் தொழில் துறையின் மாற்றத்திற்கு சீனாவின் புத்தாக்கம் நன்மை அளிக்கிறது. சீனாவின் திறப்பு மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, உலகின் பல்வேறு நாடுகளுடன் இணைந்து, ஒன்றுக்கு ஒன்று நலன் தந்து கூட்டு வெற்றி பெறும் புத்தாக்க முன்மாதிரியை சீனா வழங்குகிறது.

You May Also Like

More From Author